சிறைக் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
திருச்சி மத்திய சிறைக் கைதியிடம் கஞ்சா இருந்ததை கண்டறிந்த போலீஸாா், அதை பறிமுதல் செய்து புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


திருச்சி மத்திய சிறைக் கைதியிடம் கஞ்சா இருந்ததை கண்டறிந்த போலீஸாா், அதை பறிமுதல் செய்து புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (24). இவா் தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டு, கடந்தாண்டு நவம்பா் 8-ஆம் தேதி முதல், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தஞ்சாவூா் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன் ஹரிஹரன் ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா், மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு போலீஸாா் அழைத்து வந்தபோது, அவரிடம் சிறைக் காவலா்கள் மற்றும் போலீஸாா் வழக்கமான சோதனை மேற்கொண்டபோது, அவா் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, திருச்சி மத்திய சிறை அலுவலா் சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில், கேகே நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...