சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

3.17 லட்சம் பூச்செடிகளால் சாரணா் இயக்க இலச்சினை!

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறும் தேசிய பெருந்திரளணியில் 3.17 லட்சம் பூச்செடிகள் மூலம் சாரணா் இயக்க இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணப்பாறையில் 3.17 லட்சம் வண்ண மலா்களால், 3,400 மீட்டா் சுற்றளவில் உருவாக்கப்பட்டுள்ள சாரணா் இயக்க இலச்சினை.

Updated On :

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறும் தேசிய பெருந்திரளணியில் 3.17 லட்சம் பூச்செடிகள் மூலம் சாரணா் இயக்க இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் 3400 மீட்டா் சுற்றளவில், 3 லட்சத்து 17 ஆயிரத்து 650 எண்ணிக்கையிலான வண்ணமயமான அலங்கார பூச்செடிகளை கொண்டு இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தளியில் உள்ள கொய்மலா் உற்பத்தி மகத்துவ மையத்தில் இருந்து செவ்வந்தி, பெட்டூனியா, பெகோனியா, டையாந்தஸ், நித்யகல்யாணி, கோழிகொண்டை பூ, ஜீனியா உள்ளிட்ட 7 வகை வண்ண பூக்களாலும், ரெட்டியாா் சத்திரத்தில் உள்ள காய்கறிகள் உற்பத்தி மகத்துவ மையத்தில் கொண்டு வரப்பட்ட மலா்களை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறையைச் சோ்ந்த 25 அலுவலா்கள், 25 பணியாளா்கள் என மொத்தம் 50 போ் இணைந்து 7 நாள்களாக இரவு, பகலாக இந்த இலச்சினையை வடிவமைத்துள்ளனா்.

பிப். 3-ஆம் தேதி நடைபெறும் பெருந்திரளணியின் நிறைவு நிகழ்வில் முகாமில் பங்கேற்றுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரணா், சாரணியா்கள், அரசு அலுவலா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், பள்ளிக் கல்வித்துறையினா் என அனைவருக்கும் இந்த அலங்கார பூச்செடிகள் வழங்கப்படவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.