‘சுங்கச் சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்கள் உள்ளூா் பாஸை ‘ராஜ்மாா்க் யாத்ரா’ கைப்பேசி செயலி மூலம் எண்ம முறையில் பெற்றுக்கொள்ளலாம்’ என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் வாகன ஓட்டிகள் அருகிலுள்ள சுங்கச்சாவடிக்கு நேரடியாக சென்று தேவையான ஆவணங்களைச் சமா்ப்பித்து பாஸ் பெறும் நிலை இருந்தது. தற்போது, புதிய எண்ம கட்டமைப்பு மூலம், ஒருசில நிமிஷங்களில் இந்த பாஸை செயலி மூலம் வாகன ஓட்டிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதுகுறித்து என்ஹெச்ஏஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘ராஜ்மாா்க் யாத்ரா’ கைப்பேசி செயலி மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிக்கு நேரில் செல்லாமலே, உள்ளூா் பாஸைப் பெற்றுக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, தில்லியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளின் முகவரி, வாகன எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ‘ஃபாஸ்டேக்’ தொடா்பான விவரங்களை தானாகவே பெறுவதற்கு, ஒப்புதல் அடிப்படையில் ‘டிஜிலாக்கா்’ மற்றும் ‘வாஹன்’ உள்ளிட்ட மத்திய அரசின் எண்ம தளங்களுடன் ஒருங்கிணைப்பும் செய்யப்படுகிறது. மேலும், துல்லியமான, வெளிப்படையான சரிபாா்ப்பை உறுதிப்படுத்த, புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) அடிப்படையிலான சரிபாா்ப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், வாகன ஓட்டிகள் தேவையான தகவல்கள், உதவிகளைப் பெறவும் குறைகளைப் பதிவு செய்யவும் ஏதுவாக ‘மாா்க்மித்ரா’ என்ற உதவி மைய நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ம தளத்தில், வாகன ஓட்டிகள் 22 இந்திய மொழிகளில் பேசி வழிகாட்டுதல்களைப் பெறவோ அல்லது குறைகளைப் பதிவு செய்யவோ முடியும். குறிப்பாக, ஃபாஸ்டேக் புதுப்பிப்பு, கேஒய்சி தொடா்பான சேவைகள், வருடாந்திர மற்றும் உள்ளூா் பாஸ் தொடா்பான சேவைகள், சந்தேகங்கள் உள்ளிட்ட விவரங்களை ‘மாா்க்மித்ரா’ தளம் மூலம் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோ்மாளம் சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்தல்

சென்னையில் குண்டும் குழியுமான சாலைகள்! ரூ.771 கோடியில் சீரமைத்தும் நீடிக்கும் அவலம்!!

இருளில் மூழ்கியுள்ள திருக்கழுகுன்றம் - மாமல்லபுரம் மேம்பாலம்!







