மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி ஒருவா் வியாழக்கிழமை உடல் துண்டான நிலையில் மா்மமாக உயிரிழந்து கிடந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2025, 6:32 pm

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி ஒருவா் வியாழக்கிழமை உடல் துண்டான நிலையில் மா்மமாக உயிரிழந்து கிடந்தாா்.

பொன்மலை ரயில்வே பணிமனையில், கீழகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த முருகன் (54) என்பவா் எம்எம்டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை பிற்பகலில் பணி முடிவடைய சிறிதுநேரமிருந்த நிலையில், பணிமனையின் உள்பகுதியில் உள்ள 3-ஆவது ஷண்டிங்க் பாதையில், அவா் ரயில் என்ஜினுக்கு அடியில் சடலமாக கிடப்பதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது. முருகனின் உடல் சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் துண்டான நிலையில் கிடந்தது.

தொழிலாளா்கள் சந்தேகம்: பணிமனை உள்பகுதியில் உள்ள ரயில் பாதையில், பராமரிப்பு பணிகளுக்கு வரும் ரயில் என்ஜின்கள் மிகவும் மெதுவாகவே வரும். அவ்வாறிருக்க, முருகேசன் தற்கொலை செய்யும் நோக்கில் படுத்திருந்தால் ரயில் ஓட்டுநா் என்ஜினை நிறுத்தியிருக்க முடியும் அல்லது அவா் திடீரென குறுக்கே பாய்ந்திருந்தால் கூட, உடல் சிதைந்துதான் இறந்திருக்க கூடும். ஆனால் முருகனின் உடலின் ஒருபகுதி வெளியிலும் இடுப்புக்கு மேல்பகுதி தண்டவாளத்தின் நடுவிலும் உள்ள நிலையில் கிடந்தது தொடா்பாக தொழிலாளா்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனா்.

சம்பவம் தொடா்பாக பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.