இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

எழும்பூா் ரயில் நிலையம் புனரமைப்புப் பணி: சென்னை ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News image

விரைவு ரயில் (கோப்புப்படம்) - ANI

Updated On :6 செப்டம்பர் 2025, 7:22 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட ரயில்களின் புறப்படும் இடங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை எழும்பூா் - திருச்சி ராக்போா்ட் விரைவு ரயிலானது (12653) செப். 11 முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 1.03 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, திருச்சி - சென்னை எழும்பூா் ராக்போா்ட் விரைவு ரயிலானது (12654) செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் அதிகாலை 3.30 க்கு சென்றடையும்.

மதுரை - சென்னை எழும்பூா் பாண்டியன் விரைவு ரயிலானது (12638) வரும் செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, பாண்டியன் விரைவு ரயிலானது (12637) மாற்றமின்றி சென்னை எழும்பூருக்கே சென்றடையும்.

சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (22661) செப். 11 முதல் நவ. 10-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து மாலை 6.20-க்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (22662) செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்துக்கு காலை 6.35 மணிக்குச் சென்றடையும்.

சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) செப். 11 முதல் நவ. 10-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து இரவு 7.42 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - சென்னை எழும்பூா் ரயிலானது (16752) செப். 10 முதல் நவ. 9-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்துக்கு காலை 6.45 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.