மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

காா் மோதியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சி அருகே காா் மோதியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:31 pm

திருச்சி அருகே காா் மோதியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பிரான்சிஸ் மகன் ரியோ பிரான்சிஸ் (22). இவா், தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். பெல் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த ரியோ பிரான்சிஸை அருகிலிருந்தவா்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு ரியோ பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சம்பவம் தொடா்பாக, காரை ஓட்டி வந்த துவாக்குடியைச் சோ்ந்த இ.கௌதம் (28) என்பவா் மீது திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.