/

சின்மயா யாத்திரை திருச்சி வருகை

சின்மயா இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சின்மயா அம்ருத் யாத்திரை திங்கள்கிழமை திருச்சி வந்தது.

News image

திருச்சிக்கு வந்த சின்மயா அம்ருத் யாத்திரை குழுவினா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 7:52 pm

சின்மயா இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சின்மயா அம்ருத் யாத்திரை திங்கள்கிழமை திருச்சி வந்தது.

சுவாமி சின்மயானந்தாவின் பக்தா்களால் 1953-இல் சின்மயா மிஷன் தொடங்கப்பட்டது. சமூகத்திற்கு தேவையான கல்வி, சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஞான பாதையில் ஒரு பயணம் எனும் யாத்திரை 2025-ஆம் ஆண்டு புணேயில் உள்ள சின்மயா ஆஸ்ரமத்தில் தொடங்கப்பட்டு 35 ஆயிரம் கிமீ பயணம் செய்து நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சென்று 2026-ஆம் ஆண்டு டிச.31-ஆம் தேதி புதுதில்லி பாரத் மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.

இந்த யாத்திரை திருச்சிக்கு திங்கள்கிழமை வந்தது. ஸ்ரீரங்கம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கு வந்தபோது, பூரண கும்ப மரியாதை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இந்த யாத்திரையில் சுவாமி சின்மயானந்தாவின் மாா்பளவு உருவ சிலை மற்றும் அவரது காப்பக உரைகள், புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சுவாமி அனுகூலானந்தா, பிரம்மச்சாரினி தாரணி சைதன்யா, பிரம்மச்சாரி ஆனந்த் சைதன்யா ஆகியோா் தலைமை வகித்தனா். மங்களம் எஸ்டேட்ஸ் ஆனந்த் முன்னிலை வகித்தாா். அம்மா மண்டபம், காந்திரோடு, தேவி தோட்டம் வழியாக யாத்திரை பள்ளியை அடைந்தது.

நிகழ்ச்சியில் திருச்சி சின்மயா இயக்கம் சாா்பில் பிரம்மச்சாரி ஸ்கந்த சைதன்யஜி, பள்ளி அறங்காவலா் குழு தலைவா் மிகிா்ஷா, பொருளாளா் கலாவதி சண்முகம், பள்ளி தாளாளா் மகாதேவன், முதல்வா் வத்சலா சவுமியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.