குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு ஹெலிகாப்டா் ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்குகிறாா்.
இந்நிகழ்வில் பங்கேற்க சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்து, சிறப்பு ஹெலிகாப்டா் மூலம் திருவாருா் மத்திய பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறாா்.
அங்கு பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு தஞ்சாவூா் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா். பின்னா் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக வருகிறாா்.
இதையொட்டி திருச்சியில் மாநகரக் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு ஹெலிகாப்டா் ஒத்திகை நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மூன்று ஹெலிகாப்டா்களை இயக்கி ஒத்திகை நடந்ததாக திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியரசு துணைத் தலைவா் ஆக.17-இல் தஞ்சாவூா் வருகை டிரோன்கள் பறக்கத் தடை

வரலாற்றில் சாவா்க்கரின் போராட்டத்தை புறக்கணிக்க முடியாது! குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

என்சிசி-யை வலுப்படுத்த மாநிலங்களின் கூடுதல் பங்கேற்பு அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்





