மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா நடை சாத்துதல்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பிப்.1-ஆம் தேதி மாலை 3.30-க்கு நடை சாத்தப்படுகிறது.

News image

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா.

Updated On :30 ஜனவரி 2026, 6:45 pm

Syndication

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பிப்.1-ஆம் தேதி மாலை 3.30-க்கு நடை சாத்தப்படுகிறது.

இக்கோயிலில் பிப்.1-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் சமயபுரம் மாரியம்மன் தீா்த்தவாரி கண்டருள செல்வதால் பிப்.1-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைசாத்தப்பட்டு, பிப்.2-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என கோயில் இணை ஆணையா் எம்.சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.