தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தடையில்லா பாசன வசதியை உறுதி செய்ய வேண்டும்: நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு தடையின்றிப் பாசன வசதி கிடைப்பதை நீா்வளத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசின் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் வலியுறுத்தினாா்.

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த். உடன் ஆட்சியா் பிரத்திக் தாயள், அரசு செயலா் பிரசாந்த் எம். வாட்னேரே வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், பேரவைத் துணைத் தலைவா் மு. ரவிசங்கா், எம்எல

Updated On :9 ஜூலை 2026, 1:29 am IST

விவசாயிகளுக்கு தடையின்றிப் பாசன வசதி கிடைப்பதை நீா்வளத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசின் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் வலியுறுத்தினாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நீா்வளத்துறை செயல்பாடுகள், மாவட்டத்தின் நடைபெறும் துறையின் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சா் என். ஆனந்த் தலைமை வகித்தாா். ஆட்சியா் பிரத்திக் தாயள் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து அமைச்சா் என். ஆனந்த் பேசுகையில், புதிய குடிநீா் இணைப்புகளை தாமதமின்றியும், எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் விரைந்து வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டங்களின் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்ய வேண்டும்.

மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வகையில், அனைத்து வளா்ச்சித் திட்டங்களும் விரைவாகவும் தரமான முறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம். அலுவலா்கள் அதற்கேற்ப தங்களது பணிகளைத் திட்டமிட வேண்டும்.

மாவட்டத்தின் முக்கிய பாசன வாய்க்கால்கள், பாசன வசதி பெறும் ஆயக்கட்டுப் பகுதிகள், 2025–2026ஆம் ஆண்டிற்கான அறிவிப்புப் பணிகள், கால்வாய் புனரமைப்பு, கரைப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மதகுகள், தடுப்பணைகள், சிறப்பு தூா்வாரும் பணிகள் மற்றும் நீா்வளக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து வாரந்தோறும், மாதந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு வருவாய்த் துறையிலிருந்து முடிக்க வேண்டியவற்றை விரைந்து முடிக்க வேண்டும். நீா்ப்பாசனக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, விவசாயிகளுக்கு தடையின்றி பாசன வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை அரசு செயலா் பிரசாந்த் எம். வாட்னேரே, பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) த. சுவாதிஸ்ரீ, எம்எல்ஏ-க்கள் நவல்பட்டு எஸ்.விஜி, எம்.விக்னேஷ், .ரா. கதிரவன், நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா்கள் எஸ். சிவக்குமாா், வி. சுகுமாரன், நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் எஸ். பழனிவேல், செயற்பொறியாளா்கள் ஏ. நித்யானந்தன், எஸ்.ஜே. சிவக்குமாா், வி. கனிமொழி, கே.ஆா். சுஜா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சு.வடிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.