நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :9 ஜூலை 2026, 1:07 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அரியமங்கலம் பாப்பம்மாள் காலனி ரயில்வே கடவுப்பாதை அருகே போதை மாத்திரைகள் விற்ற சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த எஸ். தேவி (43) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் கல்லறைத் தோட்டம் அருகே போதை மாத்திரைகள் விற்ற பாலக்கரை பகுதி என். ரகுராம் (23) என்பவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 83 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், கைப்பேசி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.