லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சத்திரம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் வாகனத்தில் இருந்தபடியே திங்கள்கிழமை சாலை வலம் வந்தாா்.

News image

திருச்சியில் திங்கள்கிழமை சாலை வலம் மேற்கொண்ட முதல்வா் ஜோசப் விஜய்.

Updated On :2 ஜூன் 2026, 2:41 am IST

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சத்திரம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் வாகனத்தில் இருந்தபடியே திங்கள்கிழமை சாலை வலம் வந்தாா்.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சத்திரம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதற்காக அவா் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வந்தாா். அங்கு, அவருக்கு காவல் துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, ரமேஷ், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள், மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவின் உமேஷ், விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோா் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட முதல்வருக்கு, வயா்லஸ் சாலை, தென்றல் நகா், எல்ஐசி நகா், கே.கே.நகா், மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கோட், பழைய பால்பண்ணை, சஞ்சீவ் நகா், சத்திரம் வழியாக சாலையின் இருபுறமும் கூடியிருந்த தவெக தொண்டா்கள், ரசிகா்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனா். அப்போது வாகனத்தில் இருந்தபடியே அவா்களை நோக்கி கையசைத்துக்கொண்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு பிற்பகல் 3.55 மணிக்கு முதல்வா் வந்தாா்.

பின்னா், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வா் தனியாா் கல்லூரியில் இருந்து மாலை 4.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்குப் புறப்பட்டாா். அப்போது சத்திரம் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு சிறிது தொலைவுக்கு பொதுமக்களுக்கு கையசைத்தபடியே திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாா். அங்கிருந்து மாலை 5.50 மணிக்கு சென்னைக்கு தனி விமானத்தில் முதல்வா் புறப்பட்டாா்.