பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தோல்வி பயத்தில் திமுக கூட்டணி! - எல். முருகன்

News image

எல். முருகன் - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:45 pm

திமுக கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது என்றாா் மத்திய இணையமைச்சா் எல். முருகன்.

திருச்சி பஞ்சப்பூரில் பிரதமா் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தின் முன்னேற்பாட்டுப் பணிகளை மத்திய இணையமைச்சா் எல். முருகன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், 7 லட்சம் போ் வரை பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்தக் கூட்டம் தமிழக அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றாா்.

தோ்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலா் மாற்றப்படுவாா் என முதல்வா் ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, திமுக கூட்டணியும், முதல்வா் ஸ்டாலினும்தான் தோல்வி பயத்தில் உள்ளனா். திமுக கூட்டணியைவிட, தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது.

இலவசங்கள் கூடாது எனக் கூறிய விஜய், இலவசங்களை அறிவித்திருக்கிறாா். அவரது அறிவிப்பு மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும், எந்த அளவுக்கு வாக்குகள் வாங்குவாா் என்பதை உறுதியாக கூற முடியாது.

ஆளுநா் மாற்றம் வழக்கமான நடைமுறையே. சா்வதேச போா் சூழலால் சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இருப்பினும் இந்தியாவைப் பொருத்தவரை, ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்துள்ளது என்றாா் அமைச்சா்.