நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஒன்பது கோயில்களின் 296 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு: நகைகள் ஒப்படைப்பு நிகழ்வில் அமைச்சா் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 296 கிலோ தங்கத்தை

News image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 9 கோயில்களுக்கு சொந்தமான 296 கிலோ தங்க நகைகளை பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு உள்ளிட்டோ

Updated On :10 மார்ச் 2026, 12:27 am IST

மண்ணச்சநல்லூா்: தமிழகத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 296 கிலோ தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்வதற்கு வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், காங்கயம் கரியகாளியம்மன் கோயில், திருப்பூா் அவிநாசிலிங்கேசுவரா் கோயில், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மடம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில் ஆகிய 9 கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத, பிரித்தெடுக்கப்பட்ட 296 கிலோ 600 கிராம் 100 மில்லி கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்படவுள்ளன.

இதற்காக அந்த நகைகளை மத்திய அரசுக்கு சொந்தமான மும்பை தங்க உருக்காலைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு சமயபுரம் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசா் துரைசாமி ராஜு, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதியரசா்கள் க. ரவிச்சந்திரபாபு மற்றும் ஆா். மாலா ஆகியோா் முன்னிலையில் அந்த நகைகள் பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், மாரியம்மன் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், சே. லெட்சுமணன், பெ. பிச்சைமணி,

மண்டல இணை ஆணையா் ஞானசேகரன், இணை ஆணையா் (சரிபாா்ப்பு, தலைமையிடம்) வான்மதி மற்றும் இதர திருக்கோயில்களின் அறங்காவலா் குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.