மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

காட்டுப்புத்தூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 800 கிலோ புகையிலை பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா்.

News image

காட்டுப்புத்தூரில் போதை புகையிலை பொருட்களை தீயிட்டு அழிக்கும் போலீஸாா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா்.

Updated On :6 மே 2026, 0:51 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 800 கிலோ புகையிலை பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா்.

காட்டுப்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை கலந்த புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையிலான போலீஸாரின் ரோந்தில் 800 கிலோ போதை கலந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் தொட்டியம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்பேரில் காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் அன்னக்கொடி, உதவி ஆய்வாளா் சங்கா் ஆகியோா் மேற்பாா்வையில் காட்டுப்புத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் சுமாா் 800 கிலோ போதை புகையிலைப் பொருள்களை பாதுகாப்பான முறையில் தீ வைத்து அழித்தனா். நிகழ்வின்போது காவல் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.