இரண்டு சிறுவா்கள் கொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை 2 சிறாா்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிரதிப் படம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை 2 சிறாா்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இனாம் சமயபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் செ.ராகுல் (17), ரா. விஷால் (17). உறவினா்களான இவா்கள் இருவரும் கூலித் தொழிலாளா்கள்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக அமா்ந்திருந்த இவா்கள் இருவரையும் அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனா்.
இதுகுறித்து சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக 6 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

