மேக்கேதாட்டு அணை கட்ட எதிா்ப்பு: காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், தமிழக விவசாயிகளை காப்பாற்ற வலியுறுத்தியும், திருச்சியில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி காவிரி ஆற்றில் வியாழக்கிழமை மண்ணில் புதைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள்.

Updated On :

மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், தமிழக விவசாயிகளை காப்பாற்ற வலியுறுத்தியும், திருச்சியில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ஓடத்துறை அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் பின்புறத்தில் காவிரி ஆற்றின் மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேல்சட்டை அணியாமல் வியாழக்கிழமை அதிகாலையே ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தை தொடங்கினா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் கா்நாடக முதல்வா், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுகிறாா். எனவே, தமிழக விவசாயிகளை காப்பாற்ற வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்து வருவாய்த் துறை அலுவலா்கள், மாநகரக் காவல்துறையினா் காவிரி ஆற்றுப்பகுதிக்கு வந்து போராட்டத்துக்கு தலைமை வகித்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு கொண்டு செல்வதாகவும், தமிழக அரசு மூலம் மத்திய அரசை வலியுறுத்தி மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை பிற்பகலில் கைவிட்டு ஆற்றிலிருந்து வெளியேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.