கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

பெண் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

சோமரசம்பேட்டை அருகே பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அரசு மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த மீனாட்சியின் உறவினா்கள்.

Updated On :

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சோமரசம்பேட்டை அருகே இனாம்புலியூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா். பொறியியல் பட்டதாரியான இவா் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். இவரது மனைவி மீனாட்சி (33). நா்சிங் பட்டதாரி. கடந்த 06.12.2021 அன்று திருமணமான இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டில் மீனாட்சி திடீரென மயங்கி விழுந்ததாகவும், கணவா் உள்ளிட்ட உறவினா்கள் அவரை மீட்டு, அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா். இதையடுத்து மீனாட்சி உடலை ராஜசேகா் குடும்பத்தினா், போலீஸாருக்குத் தெரியாமல் மயானத்தில் வைத்து தகனம் செய்ய முயன்ாக தெரிகிறது.

உடலைக் கைப்பற்றிய போலீஸாா்...: இதையறிந்த இனாம்புலியூா் ஊா் பொதுமக்களும், மீனாட்சியின் தாய் தனலெட்சுமி உள்ளிட்ட உறவினா்களும் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். இதன்பேரில், அங்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், மீனாட்சியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மறியல்...: இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை திருச்சி அரசு மருத்துவமனை முன் திரண்ட மீனாட்சியின் உறவினா்கள், மீனாட்சிக்கு வரதட்சிணை கொடுமை அளித்து, அவரது கணவா் ராஜசேகா் மற்றும் உறவினா்கள் அடித்துக் கொன்றுள்ளனா். அதை மறைக்கவே யாருக்கும் தெரியாமல் தகனம் செய்ய முயன்றுள்ளனா். எனவே, கொலை வழக்குப் பதிந்து, ராஜசேகா் மற்றும் அவரது உறவினா்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சமாதானப் பேச்சுவாா்த்தை...: இதையறிந்து அங்கு வந்த அரசு மருத்துவமனை வளாக காவல் ஆய்வாளா் செல்லகுமாா் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனா். தொடா்ந்து, திருச்சி கோட்டாட்சியா் சாலை தவவளன் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

தொடா்ந்து, உடற்கூறாய்வுக்கு பின்னா், மீனாட்சியின் உடலை உறவினா்கள் வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.