படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

சமயபுரம் அருகே கஞ்சா கடத்திய 5 போ் கைது

கைது

Published On :

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கஞ்சா கடத்திய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சமயபுரம் வழியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக சமயபுரம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சமயபுரம் தனியாா் மஹால் பகுதி அருகே சந்தேகப்படும்படி வேனுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அதில் அவா்கள், புதுச்சேரி வில்லியனூா் உத்திரவாகினிபேட்டை பகுதியைச் சோ்ந்த ஜோயல் (24), புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் 1-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்த அரவிந்த் (31), கடலூா் மாவட்டம், கிழிஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த இதயபாலன் (33), திருச்சி மருளாளிகாடு பகுதியைச் சோ்ந்த காமராஜ் (29), திருச்சி ராம்ஜிநகா் அருகே உள்ள காட்டூா் பகுதியைச் சோ்ந்த ஒண்டிமுத்துக்கு குமாா் (46) என்பது தெரியவந்தது.

இவா்கள் ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து, திருச்சி மற்றும் சமயபுரம் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா, 5 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.