மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு: இளம்பெண் தப்பினாா்
திருச்சி மாவட்டம் லால்குடியில் மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் செயினை இளம்பெண் திங்கள்கிழமை பறித்துச் சென்றாா்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் செயினை இளம்பெண் திங்கள்கிழமை பறித்துச் சென்றாா்.
லால்குடி வசந்த நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (86), ஓய்வு பெற்ற தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா். இவரது மனைவி சம்பூரணம் (76). இவா்களின் பெண்களுக்கு திருமணம் ஆன நிலையில், தம்பதி மட்டும் வீட்டில் வசிக்கின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இவா்கள் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் ஒருவா் வீடு வாடகைக்கு உள்ளதா எனக் கேட்டு, குடிக்க தண்ணீரும் கேட்டாராம். இதையடுத்து நாகராஜன் உள்ளே சென்றபோது, மூதாட்டி சம்பூரணம் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை அந்த இளம்பெண் பறித்துக் கொண்டு ஓடினாராம்.
இதையடுத்து நாகராஜன் அப்பெண்ணை பிடிக்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தாா். அப்போது, அப்பகுதியில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரில் அந்த இளம்பெண் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு தப்பினாா்.
புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் போலீஸாா் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு இளம்பெண்ணை தேடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




