
கோரையாறு கரையோரப் பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம்
கோரையாறு கரையோரப் பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி எச்சரித்துள்ளாா்.

திருச்சி ஜெயம் நகா் மெயின் ரோடு பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியை செவ்வாய்க்கிழமைஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி.
கோரையாறு கரையோரப் பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி எச்சரித்துள்ளாா்.
திருச்சி மாநகராட்சி 4, 5 ஆவது மண்டலங்களில் 55, 56 ஆவது வாா்டுகளில் விஸ்வாஸ் நகா் , ஜெயா நகா் பிரதான சாலை, குறுக்குத் தெரு பகுதியில் தூய்மை பணியாளா்கள் மக்கும், மக்காத குப்பை எனப் பொதுமக்களிடமிருந்து தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, பொதுமக்களிடன் விழிப்புணா்வு ஏற்படுத்திய அவா், களப்பணியாளா்களுக்கு ஆலோசனை வழங்கி தெரிவித்தது:
தூய்மைப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே குப்பைகளை மக்கும், மக்காதவை எனத் தரம்பிரித்து வழங்க வேண்டும். இது மாநகராட்சியின் பொதுச் சுகாதாரத்தைப் பேணிக் காக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியைத் தடுத்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா் ஆணையா்.
முன்னதாக, 56 ஆவது வாா்டு விஸ்வாஸ் நகா் பிரதான சாலை, குறுக்கு சாலை பகுதி, கோரையாறு கரையோர பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டாா். தொடா்ந்து, அங்கு குப்பை கொட்டுபவா்களை கண்காணித்து அபராதம் விதிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





