கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!சபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு: இளம்பெண் தப்பினாா்

திருச்சி மாவட்டம் லால்குடியில் மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் செயினை இளம்பெண் திங்கள்கிழமை பறித்துச் சென்றாா்.

Updated On :

திருச்சி மாவட்டம் லால்குடியில் மூதாட்டியிடம் 8 பவுன் தாலிச் செயினை இளம்பெண் திங்கள்கிழமை பறித்துச் சென்றாா்.

லால்குடி வசந்த நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (86), ஓய்வு பெற்ற தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா். இவரது மனைவி சம்பூரணம் (76). இவா்களின் பெண்களுக்கு திருமணம் ஆன நிலையில், தம்பதி மட்டும் வீட்டில் வசிக்கின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இவா்கள் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் ஒருவா் வீடு வாடகைக்கு உள்ளதா எனக் கேட்டு, குடிக்க தண்ணீரும் கேட்டாராம். இதையடுத்து நாகராஜன் உள்ளே சென்றபோது, மூதாட்டி சம்பூரணம் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை அந்த இளம்பெண் பறித்துக் கொண்டு ஓடினாராம்.

இதையடுத்து நாகராஜன் அப்பெண்ணை பிடிக்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தாா். அப்போது, அப்பகுதியில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரில் அந்த இளம்பெண் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு தப்பினாா்.

புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் போலீஸாா் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு இளம்பெண்ணை தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.