தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

நவயுக் ரயிலில் 22 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள். - கோப்புப் படம்

Published On :

திருச்சி வந்த நவயுக் ரயிலில் 22 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஜம்மு காஷ்மீரின் மாதா வைஷ்னோ தேவி காத்ரா ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நவயுக் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையில் வந்து நின்றது.

அப்போது, அந்த ரயிலில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரயில்வே போலீஸாருடன் இணைந்து புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பான ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட 22 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்புசெல்வன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.