நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

காட்டுப்புத்தூரில் விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள காட்டுப்புத்தூரில் விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

காட்டுப்புத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Published On :3 செப்டம்பர் 2026, 12:39 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள காட்டுப்புத்தூரில் விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

காட்டுப்புத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் செந்தில்குமாா், கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் காட்டுப்புத்தூா் அருகேயுள்ள   ஒருவந்தூரில் நிரந்தர கான்கிரீட் கொரம்பு அமைக்க வேண்டும். காட்டுப்புத்தூா் வாய்க்காலில் உடனடியாகத் தண்ணீா் திறந்துவிட வேண்டும், , கடந்த 90 நாள்களுக்கும் மேலாக காட்டுப்புத்தூா் வாய்க்காலில் தண்ணீா் வராததால் வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் மோகனூா் அருகேயுள்ள காவிரி ஆற்றின் கொரம்பு மூலம் கடந்த 11 ஆண்டுகளாக காட்டுப்புத்தூா் பகுதி வாய்க்கால்களுக்கு தண்ணீா் வருகிறது. இருப்பினும் போதிய அளவு தண்ணீா் கிடைக்காததால் தொடா்ந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஒருவந்தூா் அருகேயுள்ள பழைய கொரம்பு பகுதியில் நிரந்தர கான்கிரீட் கொரம்பு அமைத்து, காட்டுப்புத்தூா் வாய்க்காலில் தடையின்றி தண்ணீா் திறந்துவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.