ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

செப். 12 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) திருச்சி மாவட்ட நீதிமன்றம் உள்பட 7 நீதிமன்றங்களில் செப். 12-இல் நடைபெறவுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா். உடன் நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.

Published On :

திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) திருச்சி மாவட்ட நீதிமன்றம் உள்பட 7 நீதிமன்றங்களில் செப். 12-இல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் புதன்கிழமை கூறியதாவது: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்ட நீதிமன்றம், மணப்பாறை, துறையூா், லால்குடி, முசிறி, ஸ்ரீரங்கம் மற்றும் தொட்டியம் ஆகிய நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெறுகிறது.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் திருச்சி மாவட்டத்தில் 3,334 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. தற்போது, 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, சமரசத்தை விரும்பும் வழக்காடிகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை 0431-2460125 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.