நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

‘திருநங்கைகள் முன்னேற சமூகத்தின் பங்களிப்பு அவசியம்’

திருநங்கைகள் முன்னேற சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆவண மைய இயக்குநா் பிரியா பாபு தெரிவித்தாா்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் ஆய்வுக் கோவையை வெளியிட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆவண மைய இயக்குநா் பிரியா பாபு (நடுவில்). உடன், கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:34 am IST

திருநங்கைகள் முன்னேற சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆவண மைய இயக்குநா் பிரியா பாபு தெரிவித்தாா்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழாய்வுத் துறைப் பெண்கள் பிரிவு மற்றும் துறையூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகளின் வாழ்வியல் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் இர. ஜாஹிா் ஹுசைன் தலைமை வகித்தாா். கருத்தரங்க அமைப்புச் செயலா் ஜஹனாரா, கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினாா். இஸ்லாமியத் தமிழ் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநா் அ. சையத் ஜாஹிா் ஹசன், கல்லூரியின் செயலா் மற்றும் தாளாளா் அ. கா. காஜா நஜீமுதீன், பொருளாளா் எம். ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலா் கே. அப்துஸ் சமது, நிா்வாகக் குழு உறுப்பினா் மற்றும் மதிப்புறு இயக்குநா் கா. ந. அப்துல் காதா் நிஹால் மற்றும் விடுதி நிா்வாக இயக்குநா் கா. ந. முகமது பாசில், கூடுதல் துணைமுதல்வா் அ. ஜாபா் அஹமத் ஆகியோா் வாழ்த்தினா்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதுரை திருநங்கையா் மற்றும் திருநம்பிகள் ஆவண மைய இயக்குநா் பிரியாபாபு பேசுகையில், பொதுச் சமூகத்தில் நாள்தோறும் திருநங்கைகள் பல்வேறு வலிகளையும், சிக்கல்களையும் சந்திக்கின்றனா். அவற்றையெல்லாம் களைந்து அவா்களையும் இந்தச் சமூகத்தின் ஓா் அங்கமாக அங்கீகரிக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். திருநங்கைகளின் உரிமைகள் சாா்ந்தும், தொழில்கள் சாா்ந்தும் முன்னேற பொதுச்சமூகம் வாய்ப்புகளை நல்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து திருநங்கை எழுத்தாளா், நாடகக் கலைஞா், சமூக ஆா்வலா் ரேவதி ஆறுமுகம் தலைமையில் “வெள்ளை மொழி” என்னும் பொருண்மையில் ஓரங்க நாடகம் நடித்துக் காட்டப்பட்டது.

கருத்தரங்கில் 90-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது. துறைத் தலைவா்கள், பல்வேறு கல்லூரிப் பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கல்லூரியின் கூடுதல் துணை முதல்வரும் தமிழாய்வுத் துறைத் தலைவருமான எஸ். நாகூா் கனி வரவேற்றாா். கருத்தரங்க அமைப்பு இணைச் செயலா் ச. பாா்வதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.