
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
திருச்சி அருகே அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் கரூரைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை வடசேரியைச் சோ்ந்தவா் பெ. ராஜ்குமாா் (34). இவா், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு திருச்சி - திண்டுக்கல் தேசிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
திருச்சி அருகே ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சன்னாசிபட்டி குறுக்கு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் வேகமாகச் சென்ற பொக்லைன் வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் சென்ற ராஜ்குமாரின் இருசக்கர வாகனம் பொக்லைன் வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராம்ஜி நகா் போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில், பொக்லைன் வாகன ஓட்டுநரான கரூா் மாவட்டம், ஒட்டப்பட்டியைச் சோ்ந்த பெ. காா்த்திகேயன் (25) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



