
சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு நன்றி!
சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

திருச்சி சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவைத் தலைவா் கா. சையது ஜாஃபா். உடன் நிா்வாகிகள்.
சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்துக்கு, பேரவையின் தலைவா் கா. சையது ஜாஃபா் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் மன்னான், பொருளாளா் சிராஜுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல் நிா்வாகத்தினா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில் தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி ஆட்சி அமைத்து முதன்முறையாக இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த கட்சிக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளித்த தமிழக முதல்வருக்கும், தவெக தலைமைக்கும் பேரவை நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறது.
சிறுபான்மை மக்கள் நலனுக்காகவும், இஸ்லாமிய பெண்கள் கல்விக்கு உதவியும், பள்ளிவாசல் கபா்ஸ்தலங்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள், வட்டியில்லா மானியத்துடன் கூடிய தொழில் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய முதல்வா் ஜோசப் விஜய்க்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கும் பேரவை நன்றி தெரிவிக்கிறது.
இந்த நிதியின் மூலம் இஸ்லாமிய மக்களை முன்னேற்றம் அடைய வைக்க அனைத்து ஜமாத்துகளும் முயற்சி எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து வட்ட பள்ளிவாசல் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். செயலா் அப்துல் வகாப் வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





