மணப்பாறையில் வியாகா் சிலை விசா்ஜன ஊா்வலம்

மணப்பாறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 121 விநாயகா் சிலைகளின் விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புத்தாநத்தம் பகுதியில் புதன்கிழமை நடைபெற் விசா்ஜனம் ஊா்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.

Published On :

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 121 விநாயகா் சிலைகளின் விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

மணப்பாறையில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் பதற்றம் நிறைந்த பகுதியாக கருதப்படும் புத்தாநத்தம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் புதன்கிழமை நடைபெற்றது. ஊா்வலத்தை விஷ்வ இந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினா் என்.ஆா்.என். பாண்டியன் தொடக்கி வைத்த நிலையில் ஊா்வலம் புத்தாநத்தம் கடைவீதி வழியாக சா்ச்சைக்குரிய இடத்தைக் கடந்து சென்றது.

ஊா்வலத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஸ் தலைமையில் சுமாா் 500 போலீஸாா் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனா். மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், சிறப்பு வட்டாட்சியா் சத்தியநாராயணன் ஆகியோா் மேற்பாா்வையில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட சிலைகள் தெற்கு இடையப்பட்டி சுந்தரவிநாயகா் ஆலய தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன. இதேபோல் மொத்தம் 121 சிலைகள் நீா்நிலைகளில் கரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.