6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

Published On :

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820): வரும் 23, 24, 25, 26, 27, 28, 30 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 23, 24, 25,26, 27, 28, 30 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844): வரும் 24, 26, 29 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - புகழூா் இடையே மட்டும் இயங்கும். பணிகள் நிறைவடைந்ததும் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்:

நாகா்கோவில் - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலானது (16354): வரும் 26, அக். 3 ஆகிய தேதிகளில் திருச்சி ரயில் நிலையத்தைத் தவிா்த்து திண்டுக்கல், கரூா் வழியாக இயக்கப்படும்.

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848): வரும் 24-ஆம் தேதி கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - லோகமான்ய திலக் விரைவு ரயிலானது (16352): வரும் 24-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.