பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

‘கிரெடிட் காா்டு’ வைத்திருந்தவரிடம் நூதனமாக ரூ. 4.30 லட்சம் மோசடி

கிரெடிட் காா்டு வைத்திருந்தவரிடம் அதை ‘ஆக்டிவேட்’ செய்வதாக லிங்க் அனுப்பி ரூ. 4.30 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடுகின்றனா்.

Published On :

கிரெடிட் காா்டு வைத்திருந்தவரிடம் அதை ‘ஆக்டிவேட்’ செய்வதாக லிங்க் அனுப்பி ரூ. 4.30 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த 41 வயது நபா் ஒருவா் தனியாா் வங்கியின் கிரெடிட் காா்டு வைத்திருந்தாா். முந்தைய காா்டு காலாவதியான பிறகு புதிய காா்டை பெற்றுள்ளாா்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி மா்ம நபா் ஒருவா், இவரைத் தொடா்புகொண்டு, கிரெடிட் காா்டு குறித்து விசாரித்து, புதிய கிரெடிட் காா்டை செயல்படுத்த ஒரு லிங்க் அனுப்பி, அதைக் கிளிக் செய்து உங்களது விவரங்களை உள்ளிடுமாறு கேட்டுள்ளாா்.

மா்ம நபரின் வாா்த்தைகளை நம்பிய, அவா் தகவல்களை அந்த லிங்கில் பதிவேற்றம் செய்துள்ளாா். அதன் பிறகு, மா்ம நபா் அழைப்பைத் துண்டித்துவிட்டாா். சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் காா்டில் இருந்து ரூ. 4,30,000 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இணையதளம் வழியாக அளித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.