வரலாற்றுப் பெருமையை இழந்த வந்தவாசி
வந்தவாசி, ஆக.18: சிதிலமடைந்து அதன் வரலாற்றுப் பெருமையை இழந்து வரும் வந்தவாசி கோட்டையை புனரமைத்து போர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரியில் பிரெஞ்ச் கவர்


வந்தவாசி, ஆக.18: சிதிலமடைந்து அதன் வரலாற்றுப் பெருமையை இழந்து வரும் வந்தவாசி கோட்டையை புனரமைத்து போர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
புதுச்சேரியில் பிரெஞ்ச் கவர்னராக டியூப்ளெக்ஸ் என்பவர் கி.பி.1742-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் பிரெஞ்ச் ஆதிக்கத்தை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரெஞ்ச்-இந்திய வாணிபத்தை பெருமளவில் ஊக்கவித்து வந்தார். அப்போது வந்தவாசி கோட்டை பிரெஞ்ச் படை வசமிருந்தது.
இந்தக் கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேயப் படையினர் கி.பி.1752-ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலும், கி.பி.1757-ல் கர்னல் ஆல்டர் தலைமையிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஆங்கிலேயப் படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் கி.பி.1760-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி தளபதி சர் அயர்கூட் தலைமையில் ஆங்கிலேயப் படை மீண்டும் வந்தவாசி கோட்டையைத் தாக்கியது. இதில் தளபதி கவுண்ட் டி லாலி தலைமையிலான பிரெஞ்ச் படையினருக்கும், தளபதி சர் அயர்கூட் தலைமையிலான ஆங்கிலேய படையினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
இதில் ஆங்கிலேய படையில் 1,700 பேரும், பிரெஞ்ச் படையில் 2,000 பேரும் போரிட்டனர். இதில் ஆங்கிலேயப் படை வெற்றி பெற்றது. இதையடுத்து வந்தவாசி கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றது.
இந்தப் போரில் வெற்றி பெற்றதன் மூலம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் வலுப்பெற்று இந்தியாவில் அவர்களை முழுமையான ஆட்சியாளர்களாக மாற்றியது என்றே கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...