வந்தவாசியில் தயாராகும் விநாயகர் சிலைகள்!
வந்தவாசி, ஆக.25: விநாயகர் சதுர்த்தியையொட்டி வந்தவாசியில் சுமார் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் வந்தவாசி நகர


வந்தவாசி, ஆக.25: விநாயகர் சதுர்த்தியையொட்டி வந்தவாசியில் சுமார் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் வந்தவாசி நகரில் 35-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மேலும் வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை வந்தவாசியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை வாங்க விழுப்புரம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. விநாயகர் சதுர்த்திக்கு 2 நாட்களுக்கு முன்பே விழுப்புரம் சென்று சிலைகள் செய்யும் பகுதியில் தங்கி, வேனில் எடுத்து வருவர். இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. செலவும் அதிகம்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தவாசி நகரிலேயே சிலைகள் தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இங்கு சுமார் 3 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன.
சிங்க வாகன விநாயகர், யானை வாகன விநாயகர், அன்ன வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர் உள்ளிட்ட 20 வகை சிலைகள் செய்யப்படுகின்றன. பேப்பர் கூழை அச்சில் ஊற்றி தலைப்பகுதி, கைகள், உடல்பகுதி ஆகியவை தனித்தனியாக முதலில் தயார் செய்யப்படுகின்றன. பின்னர் இந்தப் பகுதிகள் ஒட்ட வைக்கப்பட்டு சிலைகள் உருவாக்கப்படுகின்றன. நீர் வண்ணம் பூசப்பட்டப் பின் சிலைகள் முழுமை அடைகின்றன. இப்பணியில் 3 கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரவி கூறியது: விநாயகர் சதுர்த்தி தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே சிலை செய்யும் பணியை தொடங்கிவிடுகிறோம். சுமார் 80 சிலைகள் வரை செய்கிறோம். இவை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சிலைகள் வந்தவாசி நகரம், ஆராசூர், வடவணக்கம்பாடி, தேசூர், தெள்ளார், சேனல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...