எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

வந்தவாசி, டிச. 22: வந்தவாசியை அடுத்த வங்காரம் காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது வங்காரம்-ஆவணவாடி ஊராட்சி. இந்த ஊராட்சி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:43 am

கணேஷ்கிரி

வந்தவாசி, டிச. 22: வந்தவாசியை அடுத்த வங்காரம் காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது வங்காரம்-ஆவணவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட வங்காரம் காலனியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 20 தொகுப்பு வீடுகளும், 15 ஆண்டுகளுக்கு முன்பு 20 தொகுப்பு வீடுகளும் கட்டப்பட்டன. இந்த 40 தொகுப்பு வீடுகளில் மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த வீடுகள் அனைத்தும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. மேற்கூரையில் சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சுவர்களில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மழைக் காலங்களின்போது மேற்கூரை ஒழுகுவதால் வீடுகளின் மேல் தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

மேலும் விரிசல் ஏற்பட்ட சுவர்களின் வழியாகவும் மழைநீர் வீட்டினுள் புகுவதால் தரை எப்போதும் ஈரமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும், தரையில் படுத்துத் தூங்க முடிவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடுகள் பராமரிக்கப்படவில்லை என்றால் இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம்.

எனவே சேதமடைந்துள்ள இந்த வீடுகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.