மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நெடுஞ்சாலையின் குறுக்கே மேற்கூரை அமைக்கலாமே!

ஆம்பூர், செப்.7: ஆம்பூர் பஸ் நிலையம் அருகே நிற்க மேற்கூரை இல்லாததால் பஸ்ஸýக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையினால் அவதிபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலையின் குறுக்கே மேற்கூரை அமைக்க வேண்டும் என்பதே

Updated On :20 செப்டம்பர் 2012, 5:24 pm

ஆம்பூர், செப்.7: ஆம்பூர் பஸ் நிலையம் அருகே நிற்க மேற்கூரை இல்லாததால் பஸ்ஸýக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையினால் அவதிபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலையின் குறுக்கே மேற்கூரை அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.

  ஆம்பூர் பஸ் நிலையம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.  தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு முன் பெரும்பாலான பஸ்கள் ஆம்பூர் பஸ் நிலையத்துக்குள் சென்று வந்தன. வாணியம்பாடி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையில் நின்று சென்றன.

  தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இதனால் ஆம்பூரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் நகரப் பஸ்கள், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், வேலூர், சென்னை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டுமே ஆம்பூர் பஸ் நிலையத்துக்குள் சென்று வருகின்றன. வாணியம்பாடி மார்க்கமாக திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று செல்கின்றன. இந்த பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

  தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆம்பூர் ரயில் நிலைய வளாகம் இருப்பதாலும், 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்த பிறகு தேசிய நெடுஞ்சாலையில் இடம் இல்லாததாலும் மேற்கூரை அமைக்கப்படவில்லையென கூறப்படுகிறது.

  இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் கூறியது: மேற்கூரை அமைக்க  அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதில் இல்லை என்றார்.

  சென்னையில் உள்ளது போல ஆம்பூரிலும் சர்வீஸ் சாலையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.