போயர், ஒட்டர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

தருமபுரி, அக். 10: போயர், ஒட்டர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பண்டி, கொட்டா சமுதாய மக்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. அச்சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கி

தருமபுரி, அக். 10: போயர், ஒட்டர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பண்டி, கொட்டா சமுதாய மக்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் கே.கந்தப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், போயர், ஒட்டர் சமூக மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கல் உடைத்தல், கட்டட வேலை, கூலித் தொழில்களையே நம்பியுள்ளனர்.

எனவே போயர், ஒட்டர் சமூக மக்களுக்கு பண்டி, கொட்டா என்ற சாதிச்சான்று வழங்கி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் நிறுவனர் எல்.ஆர்.வெங்கடாசலம், முனைவர் கே.பொன்னுராஜ், மாவட்ட துணைத் தலைவர் என்.பி.முருகேசன், செயலர் ஆர்.ரகுபதி, பொருளாளர் கி.அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com