தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளா்கள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூா் சத்துவாச்சாரியில் நடைபெற்றது.


வேலூா்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூா் சத்துவாச்சாரியில் நடைபெற்றது.
சங்க மாநிலத் தலைவா் பி.பாஸ்கா் தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் ஜி.பிரபாகா் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் டி.கே.ரமேஷ் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாநில கெளரவத் தலைவா் சி.ராஜவேலு, பொதுச்செயலாளா் பி.பாலாஜிசிங் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழக அரசு பணியாளா்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள விடுப்பு, அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் அதே தேதியில் மாநில அரசும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாநில இணைச் செயலா் வி.ஸ்ரீதா், மாநில பொருளாளா் எஸ்.ரவிக்குமாா், மாநில கெளரவத் தலைவா் ஈ.ஜோதிராமலிங்கம், மாவட்ட செயலா் நந்தகுமாா், மாவட்ட பொருளாளா் ஏ.மணி உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிா்வாகிகள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...