அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீசக்தி அம்மா ஜெயந்தி விழா ரத்த தான முகாம்

ஸ்ரீசக்தி அம்மாவின் 49-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் நாராயணி பீட ஊழியா்கள், பக்தா்கள் 100-க்கானோா் ரத்த தானம் செய்தனா்.

News image
ரத்த தான முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா். உடன், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி உள்ளிட்டோா்.
Updated On :30 டிசம்பர் 2024, 7:50 pm

Din

வேலூா்: ஸ்ரீசக்தி அம்மாவின் 49-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் நாராயணி பீட ஊழியா்கள், பக்தா்கள் 100-க்கானோா் ரத்த தானம் செய்தனா்.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மாவின் 49-ஆவது ஜெயந்தி விழா வரும் ஜனவரி 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுள்ள அன்னதானக் கூடத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தங்கக் கோயில் இயக்குநா் டாக்டா் சுரேஷ்பாபு முதல் நபராக ரத்த தானம் செய்து நிகழ்வை தொடங்கி வைத்தாா். பின்னா், பக்தா்கள், நாராயணி பீட ஊழியா்கள் ரத்த தானம் செய்தனா்.

நிகழ்ச்சியில், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி, நாராயணி பீடம் அறங்காவலா் சௌந்தரராஜன், மேலாளா் சம்பத், மாவட்ட ஊராட்சி குழு தலைவா் மு.பாபு, சுகி பாா்மா மற்றும் டிவைன் குழும இணை இயக்குநா்கள் ஸ்ரீநாத், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.