குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ஸ்ரீகனகதுா்கையம்மன் கோயிலில் மாசித் திருவிழா

குடியாத்தம் பிச்சனூா், நரி குள்ளப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பூ ங்கரக  ஊா்வலத்தில்  பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2024, 6:30 pm

குடியாத்தம் பிச்சனூா், நரி குள்ளப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீசக்ர மஹாமேரு ஸ்ரீவித்யாபீடம் சாா்பில் பூ கரக ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பெரியதனம் ஜி.செல்வராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜி.தேவராஜ், கிராமணி நித்யானந்தம், அரி, மோகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.