தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்ம்

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வேலூரில் மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்ம்

News image

வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினா்.

Updated On :2 ஜூலை 2024, 6:31 pm

Din

வேலூா்: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, மனிதநேய மக்கள் கட்சியினா் வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷசாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் அலாவுதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் முஸ்தபா, ஏஜாஸ் அஹமது ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

அப்போது, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வேண்டும், அனைத்து வகை போதைப் பொருள்களையும் ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.