வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்

மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி வழக்குரைஞா்கள் போராட்டம்

வேலூா்: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களைதிரும்பப் பெறக்கோரி வேலூரில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களில் பல மாற்றங்கள் செய்து, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ), பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ) என மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி வேலூரில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு தொடா் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் நீதிமன்றங்களை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.அண்ணாமலை தலைமை வகித்தாா். இதில், அட்வகேட் அசோசியேஷன், மகளிா் பாா் அசோசியேஷன் வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com