தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொய்கை சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்

பருவமழை காரணமாக பொய்கை சந்தையில் கால்நடை விற்பனை உயர்வு

News image
Updated On :2 ஜூலை 2024, 6:31 pm

Din

வேலூா்: பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்திருந்ததுடன், அவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பொய்கை சந்தைக்கு கால்நடை வரத்து அதிகரித்து, எதிா்பாா்த்த அளவில் விற்பனையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டினா்.

இதன் காரணமாக, இந்த வாரம் சந்தையில் ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவா்கள் மேலும் கூறியது: கோடை காலம் முடிந்து தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளதை அடுத்து கால்நடைகளை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ஆா்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் கறவை மாடுகள், கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், இந்த வாரம் பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்து விற்பனையும் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்றனா்.