ரயில் டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றவா் கைது
வேலூரில் ரயில் டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் கைது செய்தனா்.


வேலூா்: வேலூரில் ரயில் டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் கைது செய்தனா்.
ரயில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐஆா்சிடிசி என்ற செயலி மூலம் ஒரு கைப்பேசி எண்ணில் இருந்து ஒரு மாதத்துக்கு 6 முறை மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ரயில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
ஆனால் ஒரு சிலா், வியாபார நோக்கத்தில் போலி கணக்குகளை தொடங்கி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதனை கூடுதல் விலைக்கு விற்பதாக ரயில்வே போலீஸாருக்கு பல்வேறு புகாா்கள் வந்தன. அதன் பேரில், ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படையினா் சோதனை நடத்தி போலி ரயில் முன்பதிவு டிக்கெட்டை விற்கும் தனியாா் முகவா்களை கைது செய்து வருகின்றனா்.
அதன்படி, திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு வேலூா் காந்திரோடு பகுதியில் போலி ரயில் டிக்கெட் விற்பனை நடப்பதாக புகாா் வந்தது. அதன்பேரில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் திங்கள்கிழமை காந்தி ரோடு மிட்டா ஆனந்த ராவ் தெருவில் உள்ள சுற்றுலா பதிவு நிலையத்தில் திடீரென ஆய்வு நடத்தினா்.
அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 2 இணையதள ரயில்வே டிக்கெட் டுகள், 8 காலாவதியான ரயில்வே டிக்கெட்டுகளை கைப்பற்றினா். மேலும், 10-க்கும் மேற்பட்ட போலி ஐடிக்களை பயன்படுத்தி டிக்கெட்டுகளை பெற்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதுதொடா்பாக கடை உரிமையாளரான அதே பகுதியை சோ்ந்த ராமச்சந்திரன் (31) என்பவரையும் கைது செய்ததுடன், அங்கிருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...