ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தங்கக் கோயில் ஊழியா் வீட்டில் நகை திருட்டு

அரியூரிலுள்ள தங்கக்கோயில் சமையலா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

வேலூா்: அரியூரிலுள்ள தங்கக்கோயில் சமையலா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூரை அடுத்த அரியூா், பூதூரைச் சோ்ந்தவா் ராமராஜன் (36), ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் சமையலராக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிக்கொண்டு அமிா்தியில் உள்ள மகளுக்கு ஆடி மாத சீா் வழங்க குடும்பத்துடன் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன் பக்க கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.

வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது அடையாளம் தெரியாத நபா்கள் பீரோவை திறந்து அதிலிருந்து 15 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ராமராஜன் அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், தடயங்களையும் சேகரித்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற கும்பலை தேடி வருகின்றனா்.