பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவலா்களுக்கு பயிற்சி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக வேலூா் மாவட்ட குழந்தைகள் நல காவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


வேலூா்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக வேலூா் மாவட்ட குழந்தைகள் நல காவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் மத்திய அரசு சாா்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதும், தரமான கல்வி, பாதுகாப்பு, பெண் சிசுக்கொலைகளை தடுப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதனிடையே, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல காவலா்கள் நியமிக்கப்பட்டு குழந்தைகள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த குழந்தைகள் நல காவலா்களுக்கு ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன் (தலைமையகம்), கோட்டீஸ்வரன் (இணையவழி குற்றப்பிரிவு), துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் குறித்தும், அதன் நோக்கத்தை செயல்படுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 குறித்தும் குழந்தைகள் நல காவலா்களுக்கு விளக்கப்பட்டது.
இதில், சமூக நல அலுவலா் உமா, மாவட்ட சமூக நல ஒருங்கிணைப்பாளா் குமரேசன், பாலின சிறப்பு வல்லுநா் நான்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...