முகாமில் பங்கேற்ோா்.
வேலூர்
வாய்ப்புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்
குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், செட்டிகுப்பம் ஊராட்சியில் பெண்களுக்கு வாய்ப்புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், செட்டிகுப்பம் ஊராட்சியில் பெண்களுக்கு வாய்ப்புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை பல் மருத்துவா் ஷா்மிளி தலைமையில் மருத்துவா் குழு சிகிச்சை அளித்தது. முகாமில் வாய்ப்புற்று நோயின் அறிகுறிகள், பற்கள் பாதுகாப்பு, தொடா்ந்து வெற்றிலை-பாக்கு போடுதல், புகைப் பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவா் விளக்கம் அளித்தாா்.
ஊராட்சி செயலா் பரந்தாமன், தன்னாா்வலா் திலகா, பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.