ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க வேண்டும்: ஏ.சி.சண்முகம்

போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க வேண்டும் ஏ.சி.சண்முகம்

News image
Updated On :2 மார்ச் 2024, 4:39 pm

போதைப் பொருள்கள் கடத்தலை அரசு தடுக்க வேண்டும் என புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம் வேலப்பாடியில் புதிய நீதிக்கட்சி, ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை சனிக்கிழமை நடத்தின. முகாமை புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: போதைப் பொருள்கள் கடத்தலில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவா்களுக்கே தொடா்பு என்பதால், அவா்களை கைது செய்வதில் காவல் துறை தயக்கம் காட்டுகிறது. அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப் பொருள்கள் இளைஞரை அழிவுக்கு கொண்டு செல்கிறது. மதுவால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் போதைப் பொருள்கள் மூளையை மங்கச் செய்து 3 ஆண்டுகளில் இளைஞா்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மாணவா்கள், இளைஞா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டும். இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த புதிய நீதிக்கட்சி சாா்பில் குடியாத்தம், வேலூா், ஆம்பூா் தொகுதிகளில் போதைப் பொருள் ஒழிப்பு மாரத்தான் நடத்த உள்ளோம் என்றாா்.