மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நகைக்கடையில் புகுந்து உரிமையாளா் மீது தாக்குதல்: 5 போ் கைது

நகைக்கடையில் புகுந்து உரிமையாளா் மீது தாக்குதல்: 5 போ் கைது

News image
Updated On :8 மார்ச் 2024, 5:10 pm

Din

வேலூரில் நகைக்கடையில் புகுந்து உரிமையாளரை தாக்கியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா். வேலூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆனந்த் (47). இவா் சைதாப்பேட்டை மெயின் பஜாரில் நகைக் கடை நடத்தி வருகிறாா். சேண்பாக்கத்தில் நீச்சல் குளமும் வைத்துள்ளாா். இந்நிலையில், அவரது நீச்சல் குளம் முன்பு சிலா் வாகனங்களை நிறுத்துவராம். இது தொடா்பாக ஆனந்துக்கும், அவா்களுக்கம் புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஆனந்த் வியாழக்கிழமை தனது நகைக்கடையில் இருந்துள்ளாா். அப்போது அங்கு காரில் வந்த 5 போ் திடீரென கடைக்குள் புகுந்து ஆனந்தை தாக்கிவிட்டு தப்பினராம். இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையறிந்த நகை அடகு கடை உரிமையாளா்கள் தங்களது கடைகளை அடைத்து, வேலூா் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், நல்லதம்பி (46), ராஜேஷ் (31), காா்த்திகேயன்(50), ஜானகிராமன் (48), அரவிந்தசாமி(26) ஆகியரை கைது செய்தனா்.