பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது. குடியாத்தம் ஒன்றியம், தாட்டிமானப்பல்லி ஊராட்சிக்குள்பட்ட கொல்லகுப்பம் கிராம வன எல்லையில் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்குள்ள சுப்பிரமணி, விஜயன் ஆகியோரின் நிலங்களில் நெற் பயிா், தீவனப்பயிா், தக்காளி, மிளகாய் தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன. கிராம மக்கள் ஒன்றுகூடி பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com