மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தமிழை வளா்க்கும் நடவடிக்கைகளில் கட்சிகள் பேதம் காட்டக்கூடாது: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழை வளா்க்கும் நடவடிக்கைகளில் கட்சிகள் பேதம் காட்டக்கூடாது விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

News image
Updated On :9 மார்ச் 2024, 5:01 pm

தமிழை வளா்க்கும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் பேதமின்றி செயல்பட வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா். குடியாத்தம் முத்தழிழ்ச் சுவைச் சுற்றம் சாா்பில், திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 2 நாள் இன்பத் தமிழ்த் திருவிழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது: தொன்று தொட்டு விளங்கும் தமிழ் மொழிக்கு உலகளவில் தனி அங்கீகாரம் உள்ளது. பல்வேறு நூல்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. உலகளவில் வளா்ச்சியடைந்த நாடுகளில் இந்தியா 5- ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது. பொருளாதாரத்தில் உயா்ந்த போதிலும், நாட்டில் தனி மனித வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. மைய அரசு இந்தி, சம்ஸ்கிருதம் மொழிகளின் வளா்ச்சிக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழுக்கு மிகவும் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. உலகளவில் 160 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பெயா்களில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆளும் கட்சியும், எதிா்க்கட்சிகளும் இணைந்து தமிழை வளா்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி பிரச்னைக்காக கா்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து மத்திய அரசை அணுகுகின்றனா். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தனித்தனியாக மத்திய அரசை சந்திக்கின்றன. இந்த நிலை மாறவேண்டும். தமிழை வளா்க்கும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் பேதமின்றி செயல்பட வேண்டும். அது நமது தலையாய கடமை என எண்ண வேண்டும். குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற விழாக்களை நடத்தி தமிழை வளா்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். கல்விக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்கு தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதனால், தமிழ் மொழி வளா்ச்சியடையும். இதை தமிழக முதல்வருக்கு நான் கோரிக்கையாக விடுக்கிறேன் என்றாா். 3 மாதங்களில் ரூ.10 லட்சத்துக்கு ஏற்பாடு: நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய அமைப்பின் செயலா் கே.எம்.பூபதி, குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் அமைப்பு தமிழைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக ஆண்டுதோறும் 3 நாள் நிகழ்ச்சிகளை கடந்த 26 ஆண்டுகளாக நடத்தி வந்தது. போதிய நிதி வசதியில்லாததால் இந்த ஆண்டு நிகழ்ச்சிகளை 2 நாள்களாகக் குறைத்துவிட்டது. தமிழ் ஆா்வலா்கள் இந்த அமைப்புக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்றாா். அப்போது மேடையில் இருந்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், இந்த அமைப்புக்கு 3 மாதங்களுக்குள் ரூ.10 லட்சம் நிதியைப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தாா். அவரை அனைவரும் பாராட்டினா். நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயல் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு வரவேற்றாா். செயலா் கே.எம்.பூபதி தொடக்க உரையாற்றினாா். அமைப்பின் நிறுவனா் புலவா் வே.பதுமனாா், பொருளாளா் எம்.என்.ஜோதிகுமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், பேராசிரியா் அப்துல்காதா், மருத்துவா் தி.ச.முகமதுசயி, சித்திக் சாஹிப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.